இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளர் ராமர் நோய்வாய்ப்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட  பணப்பலன்களை வழங்க நகராட்சி மேலாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துப்புரவு தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தற்காலிக துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து நடவடிக்கை எடுக்கத் தவறிய நகராட்சி மேலாளரைக் கண்டித்து நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.