
விருதுநகரில் காவலர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
விருதுநகரில் புதன்கிழமை இரவு காவலர் வீட்டு கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விருதுநகரில் புதன்கிழமை இரவு காவலர் வீட்டு கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(36). இவர், வச்சகாரபட்டி காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு புதன்கிழமை மாணிக்கவாசகம் பணிக்குச் சென்றுள்ளார். மீண்டும் பணி முடிந்து அன்றைய தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




