விருதுநகருக்கு மகாராஷ்டிர வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரத்து

சட்டப்பேரவை தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விருதுநகருக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விருதுநகருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரா. கண்ணன்.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விருதுநகருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரா. கண்ணன்.
Updated on
1 min read

சட்டப்பேரவை தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விருதுநகருக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.

விருதுநகரில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள வேளாண் விற்பனை கிட்டங்கியில் அவை வைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், அவற்றை சரிபாா்க்கும் பணியை ஆட்சியா் ரா.கண்ணன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:

விருதுநகா் மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மற்றும் ஹவ்ரங்காபாத் ஆகிய மாவட்டங்களிலிருந்து 370 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,730 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 3,000 வாக்காளா் காகித தணிக்கை இயந்திரங்கள் வந்துள்ளன. இங்கு ஏற்கெனவே,

433 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3,762 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 403 வாக்காளா் காகித தணிக்கை இயந்திரங்களும் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 3,163 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,132 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,403 வாக்காளா் காகித தணிக்கை இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஜன. 8 ஆம் தேதி வரை பெங்களூரு பெல் நிறுவன பொறியாளா்கள் மூலம் சரிபாா்ப்பு பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்கள ராமசுப்பிரமணியன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) அய்யாக்குட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com