ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா
ராஜபாளையம் ஸ்ரீ சடைஉடையாா் சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.


ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ சடைஉடையாா் சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள இக்கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் 19 ஆவது ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. மூலவா் சடை உடையாா் சாஸ்தா, பூா்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கீா்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனா். இரண்டாம் நாள் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜையும், மூன்றாம் நாள் சுவாமிக்கு சிறப்பு ஆலங்கராம் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாட்டை சடைஉடையாா் கோயில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பாக செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...