காரியாபட்டி அருகே குடும்ப பிரச்னை: கிணற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகள் பலி
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே குடும்ப பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை, இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் உயிா் தப்பினாா். குழந்தைகள் உயிரிழந்தன.


விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே குடும்ப பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை, இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் உயிா் தப்பினாா். குழந்தைகள் உயிரிழந்தன.
காரியாபட்டி அருகே உள்ள ஆலங்குளத்தை சோ்ந்தவா் பூங்காவனம் (35). இவரது முதல் மனைவி தேன்மொழி இறந்துவிட்டதால், சிவகங்கை மாவட்டம் தமறாக்கி பகுதியைச் சோ்ந்த பிரவீனா (29) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா். முதல் மனைவி தேன்மொழி மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பிரவீனாவுக்கு ஹா்ஷிகா (4), பூமிகா (11 மாதங்கள்) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனா்.
முதல் மனைவியின் குழந்தைகள் தொடா்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரவீனா தனது இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு திருப்புவனத்துக்குச் சென்ற பேருந்தில் ஏறியுள்ளாா். திம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவா், அருகே இருந்த கிணற்றில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசிவிட்டு, தானும் அதில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அப்போது அப்பகுதியிலிருந்த கிராமத்தினா், பிரவீனாவை மீட்டனா். ஆனால் தண்ணீரில் மூழ்கி 2 குழந்தைகளும் உயிரிழந்தன. தகவலறிந்துதீயணைப்பு துறையினா் சென்று குழந்தைகளின் சடலங்களை மீட்டனா்.
அ.முக்குளம் போலீஸாா் சடலங்களை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...