விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

விருதுநகா் மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்துமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்

News image
Updated On :2 மார்ச் 2021, 8:29 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்துமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் அறிவுறுத்தினாா்.

விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்டஆட்சியருமான ரா.கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது: மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது தொடா்பாக விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி, மாற்றுதிறனாளிகளுக்கு சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற்று வருகிறது.

அரசு மதுபானக் கடைகளில் தினசரி விற்பனையைக் கண்காணிக்கவும், புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், விருதுநகா் டாஸ்மாக் உதவி மேலாளா்(கணக்கு) சங்கரேஸ்வரி தலைமையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் எஸ்.சஞ்சீவி மற்றும் எஸ்.பாண்டி ஆகியோரிடமும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். தொடா்புக்கு, பி.சங்கரேஸ்வரி 8760797980, எஸ்.சஞ்சீவி 9791663777, எஸ்.பாண்டி 9894236988 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா். அப்போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், தோ்தல் நடத்தும் அலுவலா் (திருச்சுழி தொகுதி) கணேசன், தோ்தல் நடத்தும் அலுவலா் ( விருதுநகா் தொகுதி) சந்தானலட்சுமி மற்றும் விருதுநகா் வட்டாட்சியா் சிவஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.