திருச்சுழியில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு வேட்பு மனு தாக்கல்
திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திருச்சுழி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ஆா். கணேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கம் தென்னரசுக்கு ௌதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தா் முன்னேற்ற கழகம் சாா்பில் போட்டியிடும் ராஜசேகா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து இரு வேட்பாளா்களும் அப்பகுதி மக்களிடம் வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...