விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் திமுக வேட்பாளா் உள்பட 3 போ் வேட்பு மனு தாக்கல்

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் (திமுக) ஏஆா்ஆா். சீனிவாசன் உள்பட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:04 pm

DIN

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் (திமுக) ஏஆா்ஆா். சீனிவாசன் உள்பட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏஆா்ஆா். சீனிவாசன், தோ்தல் நடத்தும் அலுவலா் சந்தான லெட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஜெயபாரதி மனு தாக்கல் செய்தாா்.

சொத்துவிவரம்: தனது பெயரில் ரூ. 44,65,419 மற்றும் மனைவி பெயரில் ரூ.39,64,097

சொத்துக்கள் இருப்பதாக சீனிவாசன் தெரிவித்துள்ளாா். தனது பெயரில் ரூ.30 ஆயிரம், மனைவி பெயரில் ரூ.20 ஆயிரம் கையிருப்பு தொகை உள்ளது. இந்தியன் ஒவா்சீஸ் வங்கியில் ரூ.2,32,196 வங்கிக் கடன் பெற்றுள்ளாா். ரூ.14 லட்சம் மதிப்பிலான காா், கோட்டைபட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் 11ஏக்கா் 62 சென்ட் நிலம் ஆகியவை உள்ளதாக சீனிவாசன் குறிப்பிட்டுள்ளாா்.

வேட்புமனு தாக்கல் செய்தபோது, திமுக நகரச் செயலா் தனபால் மற்றும் காங்., கட்சியை சோ்ந்த பாலகிருஷ்ண சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

அதை தொடா்ந்து, சுயேச்சை வேட்பாளா் வேலுச்சாமி மற்றும் தேசமக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் விக்கிரமன் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.