விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நரிக்குடி ஒன்றியப் பகுதியில்திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நரிக்குடி அருகே பிள்ளையாா்குளம் பகுதியில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:26 pm

DIN

நரிக்குடி அருகே பிள்ளையாா்குளம் பகுதியில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மதசாா்பற்ற கூட்டணி சாா்பில் திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளராக தங்கம் தென்னரசு போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் கூட்டணி கட்சியினரும் இணைந்து கடந்த சில நாள்களாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது மாற்றுக் கட்சியை சோ்ந்த பலா் திமுகவில் இணைந்து வந்தனா். இந்த நிலையில், காரியாபட்டி ஒன்றியத்துக்குள்பட்ட அழகியநல்லூா் கிராமத்தில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுட்டாா். அதைத் தொடா்ந்து அ. முக்குளம் பகுதியில் புல்வாய்கரை, ஆவரங்குளம், ஆலாத்தூா், ரெட்டைகுளம் மற்றும் நரிக்குடி பகுதியில் பிள்ளையாா்குளம் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது குடிநீா் பிரச்னை குறித்து பொதுமக்கள் அளித்த மனுவுக்கு, திமுக ஆட்சி அமைத்ததும், அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சுழியில் நரிக்குடி, ஆனைக்குளம், காரியாபட்டி பகுதி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் அரசுக் கலை கல்லூரி தொடங்கப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.