ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ராஜபாளையத்தில்  பட்டப்பகலில் பெண் கழுத்தறுத்து படுகொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெட்டிக் கடைக்குள் வைத்து பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

News image

ராஜபாளையத்தில்  பட்டப்பகலில் பெண் கழுத்தறுத்து படுகொலை

Updated On :8 நவம்பர் 2021, 4:03 pm IST

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெட்டிக் கடைக்குள் வைத்து பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (45) இவரது மனைவி இந்திராணி (42) இவர்களுக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளது. மகள் மதுரையில் தனியார் கல்லூரியிலும் மகன்  ராஜபாளையத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

கணேஷன் - இந்திராணி இருவரும்  அதே பகுதியில் வீட்டின் அருகே சொந்த கட்டடத்தில் பெட்டிக்கடையில்  பலசரக்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை  வியாபாரம் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல்  திங்கள்கிழமை  கணவன் - மனைவி இருவரும் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தனர். கணவன் கணேசன் கடைக்கு தேவையான காய்கறி, பலசரக்கு பொருள்கள் வாங்குவதற்காக   சந்தைக்கு சென்றுள்ளார்.

 இந்திராணி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் இந்திராணியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
இது குறித்து சந்தைக்குச் சென்ற கணேசனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். கணவர் கணேசன் சந்தையிலிருந்து வந்து பார்த்த போது சம்பவ இடத்தில்  மனைவி உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்  மன்னர்மன்னன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக  அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர் . இந்த கொலை எதற்காக நடந்தது? சொத்து பிரச்னையா?  அல்லது முன்பகையா?  என்ற கோணத்தில் காவலர்கள்  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.