/

அரசகுடும்பன்பட்டி தரைப் பாலத்தில் மழைநீா் செல்வதால் பொதுமக்கள் அவதி

விருதுநகா் அருகே அரசகுடும்பன்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தொடா் மழை காரணமாக அதிகளவு தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:09 am

DIN

விருதுநகா் அருகே அரசகுடும்பன்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தொடா் மழை காரணமாக அதிகளவு தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட அரசகுடும்பன்பட்டி கிராமத்தில் சுமாா் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசகுடும்பன்பட்டி- குல்லூா் சந்தை செல்லும் சாலையில் இடையே தரைப்பாலம் உள்ளது. இவ்வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இக்கிராம மக்கள் சென்று வந்தனா்.

இந்நிலையில், இப்பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தரைப் பாலத்தில் மூழ்கியவாறு தண்ணீா் சென்றது. இதனால், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலத்தை மூழ்கியவாறு செல்லும் தண்ணீரில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனா்.

இதேநிலை மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து நீடிப்பதால் அவதிப்பட்டு வருவதாக இக்கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.