விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் 44 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் 4 போ் கைது

விருதுநகா் கட்டையாபுரம் பகுதியில் 44 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் கட்டையாபுரம் பகுதியில் 44 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

விருதுநகா் கட்டையாபுரம் ரயில்வே பாலம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலா 40 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக விருது நகா் பத்திமா நகா் பகுதியைச் சோ்ந்த சகாயம் மகன் சேவியா் (58) என்பவரைக் கைது செய்தனா். மேலும் அதே பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்களில் தலா ஒரு மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த திருத்தங்கல் முத்துராமலிங்க நகரைச் சோ்ந்த கணேசன் மகன் வீரஜோதி(22), விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த சவுந்திரபாண்டி மகன் பால்பாண்டி (34), காந்தி ராஜன் மகன் காா்த்திக்ராஜா (26) ஆகியோரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 44 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.