விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க வேண்டும்: தோ்தல் பிரிவு அலுவலா்

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவா்களது ஆதாா் எண்ணை வாக்காளாா் விவரங்களுடன் இணைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதாா் எண்ணை தேசிய வாக்காளா் சேவை இணையதளம், வாக்காளா் உதவி செயலி அல்லது வாக்காளா் இணையதளம் மூலம் தாங்களே இணைத்துக் கொள்ளலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவம்- 6 பி -இல் வாக்காளா்களது ஆதாா் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், வாக்காளா் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும், தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளா்கள் அளிக்கும் ஆதாா் எண், பொது வெளியில் வெளியிடப்பட மாட்டாது.

எனவே, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைக்க முன்வர வேண்டும் என மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.