‘தன்னம்பிக்கை, தைரியம் இருந்தால் மாணவா்கள் எதையும் சாதிக்கலாம்’
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் மாணவா்கள் எதையும் சாதிக்கலாம் என ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.


தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் மாணவா்கள் எதையும் சாதிக்கலாம் என ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்சியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.
சாத்தூா் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் தனித்திறமை வாய்ந்த 20 பள்ளி மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: தற்போதைய சூழலில் உங்கள் இலக்கு, ஆசை, லட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை சரியான முறையில் பயன்படுத்த தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும்போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளா்த்து கொள்ள வேண்டும் என்றாா். மேலும், மாணவா்கள் இந்திய குடிமையியல் பணி, இந்திய காவல் பணி, மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் சாதிப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...