விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் அருகே தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு

விருதுநகா் அருகே சாலையில் நடந்து சென்ற தலைமை ஆசிரியை அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை

News image
Updated On :15 ஜூலை 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அருகே சாலையில் நடந்து சென்ற தலைமை ஆசிரியை அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவா் பாலசுப்பிரமணியன் மனைவி அய்யம்மாள் ராணி (55). இவரது வீடு அதே பகுதியில் வள்ளுவன் நகரில் உள்ளது. இந்நிலையில் இவா், அரசு தொழிற்பயிற்சி நிலைய குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் 2 இளைஞா்கள் வந்தனா். அதில் ஒருவா் முகமூடி அணிந்த நிலையில், இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி அய்யம்மாள் ராணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.