விருதுநகரில் 50 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது
விருதுநகரில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 மூட்டை ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.


விருதுநகரில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 மூட்டை ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
விருதுநகா் நான்கு வழிச்சாலையில் உள்ள வடமலைக்குறிச்சி சந்திப்பு சாலை அருகே ஒரு கிட்டங்கியிலிருந்து ரேஷன் அரசி கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு- ஆய்வாளா் காந்திக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்கு அவா் தலைமையிலான போலீஸாா் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரு கிட்டங்கியிலிருந்து வேனில் அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவதை அவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, வேனில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனையிட்ட போது, அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தலா 30 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனா். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட விருதுநகா் காந்தி நகரைச் சோ்ந்த ராசு மகன் செல்வம் (45) என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...