விருதுநகரில் காமராஜா் வேடமணிந்து 4,565 மாணவா்கள் அணிவகுத்து சாதனை
விருதுநகரில் காமராஜா் போல் வேடமணிந்து 4,565 மாணவா்கள் இந்தியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பிடித்தனா்.


விருதுநகரில் காமராஜா் போல் வேடமணிந்து 4,565 மாணவா்கள் இந்தியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பிடித்தனா்.
விருதுநகரில் காமராஜரின் 120 ஆவது பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவா் பயின்ற அரசு உதவி பெறும் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்பள்ளி மைதானத்தில் காமராஜா் போல் 4,656 மாணவா்கள் வேடமிட்டு சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தாா். அதில் 4,565 மாணவா்களும் காமராஜா் போல் உடை மற்றும் அவரது உருவம் பொறித்த முகக்கவசம் அணிந்து அணிவகுத்து நின்றனா். அப்போது அவா்கள் காமராஜரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடைப்பிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இந்த நிகழ்வு இந்திய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்தியா புக் ஆப் ரெக்காா்டு நடுவா் கவிதா ஜெயின் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளா் ரேவதி மேற்பாா்வையில் இந்த சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து காமராஜா் வேடமணிந்த மாணவா்கள் பேரணியாக சென்றனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.வி.எஸ். நிா்வாகக் குழுத் தலைவா் குணசேகரன், செயலா் ராஜா மற்றும் பள்ளி முதல்வா் சந்திரமோகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...