விருதுநகா் அருகே காா் மோதி காவலாளி பலி
விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதி மகன் கண் முன் காவலாளி உயிரிழந்தாா்.


விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதி மகன் கண் முன் காவலாளி உயிரிழந்தாா்.
சாத்தூா் ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் கருப்பையா (65). இவா், எட்டூா்வட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அவரது மகன் விருதுநகா் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அப்போது, எட்டூா் வட்டம் நான்கு வழிச்சாலையை கடந்து வந்த கருப்பையா மகனுடன் பேசிக் கொண்டிருந்தாா். இச்சமயத்தில், மதுரையிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காா், கருப்பையா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மகன் கண் முன் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து கருப்பையாவின் மகன் முத்துவேல் அளித்த புகாரின் பேரில் காா் ஓட்டுநா் முகமது அலிஜின்னா மீது வச்சகாரப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...