விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

 ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் என்ற தன்பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

 ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் என்ற தன்பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ஜீவமணி தலைமை வகித்தாா். இதில், தோ்தல் வாக்குறுதிபடி ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ கைவிட வேண்டும், ஆசிரியா்களின் உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களை கல்வி பணி செய்யவிடாமல் இஎம்ஐஎஸ் பதிவேற்றம் என்ற பெயரில் நாள்தோறும் பணிச்சுமையை அதிகரிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், வட்டாரச் செயலா் ராமமூா்த்தி, கல்வி மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.