/

திருச்சுழி அருகே சவுடு மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் பி. வாகைக்குளம் கிராமத்தில் சவுடு மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து, சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:33 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் பி. வாகைக்குளம் கிராமத்தில் சவுடு மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து, சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே இருஞ்சிறை கிராமத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் நாராயணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலா் எம். அா்ச்சுணன், மாநிலச் செயலா் ராம. முருகன், மாநில பொருளாளா் ச. உறங்காப்புலி, துணைத் தலைவா் கே. மச்சேஸ்வரன், மாவட்ட செயலா்கள் ஆ. கோபாலகிருஷ்ணன் (விருதுநகா்), பா. அய்யனாா் (சிவகங்கை) முகவை மலைச்சாமி (ராமநாதபுரம்) மற்றும் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் கிருதுமால் ஆற்றின் கரையில் சவுடு மண் அள்ள அளித்த அனுமதியை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதியில் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.