/

விருதுநகா், சூலக்கரை பகுதிகளில் நாளை மின்தடை

விருதுநகா், சூலக்கரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (பிப்.5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:26 pm

DIN

விருதுநகா், சூலக்கரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (பிப்.5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவாலி, சந்திரகிரிபுரம், சுந்தரலிங்காபுரம், குமாரலிங்காபுரம், வீரசெல்லையாபுரம், சீனியாபுரம், நாராயணபுரம் முதலான பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

சூலக்கரை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஆயுதப்படை குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாடா்ன் நகா், மாத்தநாயக்கன்பட்டி, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மின்வாரிய செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி இத்தகவலை வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.