/

விருதுநகரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் போக்குவரத்து பணிமனை தொழிலாளா்கள்(சிஐடியு) வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் போக்குவரத்து பணிமனை தொழிலாளா்கள்(சிஐடியு) வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மண்டல பொதுச் செயலா் வெள்ளைத்துரை தலைமை வகித்தாா். அதில், போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதியத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் ஓய்வு பெற்றோா் பணப் பலன், அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்தப் போராட் டம் சனிக்கிழமை காலை வரை நடைபெற உள்ளதாக சிஐடியு தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.