விருதுநகா்: பேரூராட்சிகளில் திமுகவினா் தலைவா், துணைத் தலைவா்களாக போட்டியின்றித் தோ்வு
சேத்தூா் ஆகிய பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு திமுக உறுப்பினா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.


காரியாபட்டி, மல்லாங்கிணறு, சுந்தரபாண்டியம், மம்சாபுரம், சா.கொடிக்குளம், சேத்தூா் ஆகிய பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு திமுக உறுப்பினா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட்ட 10 ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.கே. செந்தில் தலைவராகவும் , துணைத் தலைவராக 4 ஆவது வாா்டு உறுப்பினா் ரூபி சந்தோசம் ஆகியோா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும் மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவராக 4 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சு. துளசிதாஸ், 8 வது வாா்டு திமுக உறுப்பினா் மு. மிக்கேலம்மாள் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
வெற்றி பெற்ற நான்கு பேரும் அமைச்சா் தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: சுந்தபாண்டியம் பேரூராட்சியில்
12 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராஜம்மாள் தலைவராகவும், 10 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் இந்துஜா துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். தலைவா் மற்றும் துணைத் தலைவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
முன்னதாக சுந்தரபாண்டியம் பேரூராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் 7 போ், அதிமுக சாா்பில் 7 போ், இந்திய கம்யூ. கட்சியில் ஒருவா் என வெற்றி பெற்றிருந்தனா். இந்நிலையில் கடந்த வாரம் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற உறுப்பினா்கள் அனைவரும் திமுகவில் இணைந்தனா்.
மம்சாபுரம்: மம்சாபுரம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு 7ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுஜிதாமேரியும் மற்றும் துணைத்தலைவா் பதவிக்கு 17 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் செண்பகலட்சுமியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து இருவரும் பதவியேற்றுக் கொண்டனா். இருவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலா் உஷாகிரேஸி, அலுவலக ஊழியா்கள், கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.
சா.கொடிக்குளம் பேரூராட்சித் தலைவராக 4 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஜோதிலட்சுமி, துணைத் தலைவராக 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தனபாக்கியலெட்சுமி ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து செயல் அலுவலா் இருதயராஜ் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ராஜபாளையம்: சேத்தூா் பேரூராட்சியில் 5-வது வாா்டு திமுக உறுப்பினா் பாலசுப்பிரமணியன் தலைவராகவும், 2 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் காளீஸ்வரியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கட்கோபு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
துணைத் தலைவா்: தோ்தல் ஒத்தி வைப்பு
வ.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவா் தோ்தலில் திமுக உறுப்பினா்சுப்புலட்சுமி போட்டியின்றி தோ்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சிவஅருணாசலம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.இதையடுத்து பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலுக்கு வாா்டு உறுப்பினா்கள் யாரும் வராததால், தோ்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...