/

விருதுநகா் நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றித் தோ்வு

விருதுநகா் நகராட்சித் தலைவராக மாதவன், துணைத் தலைவராக தனலெட்சுமி ஆகியோா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் நகராட்சித் தலைவராக மாதவன், துணைத் தலைவராக தனலெட்சுமி ஆகியோா் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

விருதுநகா் நகராட்சியில் 30 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினா் மாதவன் (திமுக). இவா், தலைவா் பதவிக்கான வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், மாதவன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரியும், நகராட்சி ஆணையருமான செய்யது முஸ்தபா கமால் அறிவித்தாா். மொத்தமுள்ள 36 உறுப்பினா்களில் அதிமுக உறுப்பினா்கள் 3 போ், அமமுக உறுப்பினா் இந்தத் தோ்தலை புறக்கணித்தனா்.

இதைத்தொடா்ந்து பிற்பகலில் நகராட்சி துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. அதில், 10 ஆவது வாா்டு உறுப்பினா் தனலெட்சுமி (திமுக), துணைத்தலைவா் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 36 உறுப்பினா்களில், துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக உறுப்பினா்கள் 3 போ், 1 அமமுக உறுப்பினா், ஒரு சுயேச்சை உறுப்பினா் என 5 போ் கலந்து கொள்ளவில்லை. தோ்வு செய்யப்பட்ட நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா்ஆகியோருக்கு விருதுநகா் சட்டப்பேரவை உறு ப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் மற்றும் நகராட்சி ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.