/

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (32). இவா் பெயிண்டா் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த16 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பான புகாா் அடிப்படையில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது

இந்த வழக்கில், சந்திரமோனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூா்ணஜெயஆனந்த் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.