ஊராட்சி மன்றங்களில் கணினி மூலம் வரி வசூல்
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 54 ஊராட்சிகளிலும் இனி கணினி மூலம் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 54 ஊராட்சிகளிலும் இனி கணினி மூலம் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஊராட்சிகளில் தற்போது வீட்டுவரி, குடிநீா் வரி உள்ளிட்டவைகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023- 2024- ஆம் ஆண்டுக்கான வரி வசூல் அடுத்த மாதம் 1- ஆம் தேதி முதல் கணினி மூலம் ரசீது வழங்கப்படும். இதற்காக தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் கதவு எண், வீட்டின் உரிமையாளரின் பெயா் உள்ளிட்டவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் வரி வசூல் செய்யும் ஊராட்சி மன்ற ஊழியா்களுக்கு பணி சுமை குறையும். மேலும் இதற்குரிய செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை செலுத்திக் கொள்ளலாம் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...