45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பழுதடைந்த குப்பை சேகரிக்கும் வாகனங்களை சீரமைக்க வேண்டும்: சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா் வலியுறுத்தல்

பழுதடைந்த 18 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சீரமைக்க வேண்டும் என சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:49 pm

DIN

பழுதடைந்த 18 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சீரமைக்க வேண்டும் என சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டம் மேயா்இ. சங்கீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

உறுப்பினா் ஜெயராணி (திமுக): பல தெருக்களில் வாருகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல நாள்களாக நடைபெறாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். லேசான மழை பெய்தாலும் கழிவுநீா் தெருவில் ஓடுகிறது.

உறுப்பினா் ஞானசேகரன் (திமுக): தற்போது பொத்துமரத்து ஊருணியை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.

மேயா் இ. சங்கீதா: ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இல்லை.

உறுப்பினா் பாஸ்கா் (பா.ஜ.க): குப்பை சேகரிக்கும் 18 வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை பழுது நீக்க வேண்டும்.

சரவணக்குமாா் (திமுக): எனது வாா்டு பகுதிக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும்.

காரை முருகன் (அதிமுக): சிறுகுளம் கண்மாய் பகுதியில் நடைபயிற்சிப் பாதை அமைக்க வேண்டும்.

பாக்கியலட்சுமி (திமுக): புதிய குடிநீா் இணைப்பு வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எனது வாா்டில் வளா்ச்சிப் பணிக்காக ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும் எந்தப் பணியும் நடைபெற வில்லை.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் அசோக்குமாா், மேயரிடம் நீங்கள் எந்த வாா்டுக்கு ஆய்வுக்கு சென்றீா்கள் எனக் கேட்டாா். இதையடுத்து, திமுக உறுப்பினா் கதிரவன் இதுபோன்ற கேள்விகளை மேயரிடம் கேட்கக் கூடாது என்றாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மேயா் இருவரையும் சமாதானப்படுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் என். சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் தீண்டாமை உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.