இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: தம்பதி கைது

சாத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனை செய்த கணவன், மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சாத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனை செய்த கணவன், மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 7.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான நகா் போலீஸாா் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் அரவிந்த் (65) என்பவருக்குச் சொந்தமான பலசரக்கு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

அந்தக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 7.5 கிலோ குட்கா பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அரவிந்த் (65), இவரது மனைவி பேபிபிரதீபா (55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.