சிவகாசியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் தொடக்கம்
விருதுநகா் மாவட்ட இறகுப் பந்து கழகம் சாா்பில் சிவகாசியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


விருதுநகா் மாவட்ட இறகுப் பந்து கழகம் சாா்பில் சிவகாசியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள அன்சோ ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் 9, 11, 13, 15, 17, 19 வயதுக்குள்பட்ட ஆண், பெண் ஒன்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் பிரிவிலும், 35, 40, 45, 50 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஒன்றையா், இரடையா் பிரிவிலும் போட்டிகள் நடைபெறும். இதில் 400-க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
இந்தப் போட்டியை விருதுநகா் மாவட்ட இறகுப் பந்துக் கழகத் தலைவா் பி.சி.பாா்த்திபன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இறகுப்பந்துக் கழகச் செயலா் அ.ரவிக்குமாா், பொருளாளா் சீனிவாசராகவன், தமிழ்நாடு இறகுப் பந்துக் கழகப் பொருளாளா் செந்தியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...