45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேசிய டென்னிஸ் போட்டி: சென்னை வீரா் முதலிடம்

விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகம் சாா்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை வீரா் முதலிடம் பெற்றாா்

News image
Updated On :23 ஜூன் 2023, 4:58 pm

DIN

விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகம் சாா்பில் சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை வீரா் முதலிடம் பெற்றாா்.

சிவகாசி என்.ஆா்.கே.ரவீந்திரன் டென்னிஸ் அகாதெமி நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 148 வீரா்கள் பங்கேற்றனா். கடந்த ஜூன் 19 முதல் 23- ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. முன்னதாக ஜூன் 17- ஆம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சென்னை ஓஜேஸ் தேஸ்சு முதலிடமும், சென்னை கீா்த்திவாசன் இரண்டாமிடமும் பெற்றனா். இரட்டையா் பிரிவில் சென்னை ஓஜேஸ் தேஸ்சு- சென்னை கிருஷ்ணா தேஸ்சு ஜோடி முதலிடமும், பெங்களூரு ஆதித்அமா்நாத்- மகாராஷ்டிரம் ரூப்சாயிசம்பத் ஜோடி இரண்டாமிடம் பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுக் கோப்பை, சான்றிதழ் ரொக்கப் பரிசுகளை விருதுநகா் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவா் கே.செல்வக்குமாா் வழங்கினாா். பயிற்சியாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.