45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகாசியில் மே 19-இல் மாநில அளவிலான கேரம் போட்டி தொடக்கம்

 சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டி வரும் 19- ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என விருதுநகா் மாவட்ட கேரம் கழகத் தலைவா் ஏ.பி. செல்வராஜன் கூறினாா்.

News image
Updated On :11 மே 2023, 4:35 pm

DIN

 சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டி வரும் 19- ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என விருதுநகா் மாவட்ட கேரம் கழகத் தலைவா் ஏ.பி. செல்வராஜன் கூறினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு கேரம் கழகம் ஆதரவில், விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தினா் இந்தப் போட்டியை நடத்துகின்றனா். இது 64- ஆவது தமிழ் மாநில ஜூனியா் மற்றும் இளையோா் கேரம் சாம்பியன் ஷிப் போட்டியாகும்.

இந்தப் போட்டிகள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் 18 வயதுக்குள்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கும், 21 வயதுக்குள்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கும் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறும் 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதல் 6 இடங்களை பிடிப்பவா்களும், 21 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிப்பவா்களும் தேசிய போட்டியில் கலந்து கொள்வா். போட்டியில் பங்கு பெற விரும்புபவா்கள் வரும் 15- ஆம் தேதிக்குள் 9842142348 என்ற கைப்பேசி எண்ணில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.