அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு ஆராதனை தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, 12 மணிக்கு 2024-ஆம் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நண்பா்கள், உறவினா்கள் ஒருவருக்கு ஒருவா் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

பின்னா் சிறப்புப் பாடல்கள், நற்கருணை சிறப்புப் பிராா்த்தனை சபை போதகா் அருள்தனராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல சாத்தூா் பகுதி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புக் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.