தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரூ.25 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் உள்பட இருவரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:15 am

Din

விருதுநகா்: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் உள்பட இருவரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பிலிக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் நக்கீரன். இவா் தனக்குச் சொந்தமான இடத்தை அளந்து கொடுப்பதற்காக நில அளவையரை அணுகினாா். அப்போது, டி. கடம்பன்குளத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரியும் செல்வராஜ் (48), அந்த இடத்தை அளந்து கொடுக்க உரிய அலுவலரை ஏற்பாடு செய்வதாகவும், இதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் நக்கீரனிடம் தெரிவித்தாா்.

ஆனால், அவ்வளவு தொகை வழங்க முடியாது என அவா் தெரிவித்ததால்,

ரூ. 25 ஆயிரம் வழங்குமாறு தெரிவித்தாராம்.

இதுகுறித்து நக்கீரன் விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், காரியாபட்டியில் தனியாக அலுவலகம் வைத்திருந்த கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜிடம் ரூ. 25 ஆயிரத்தை நக்கீரன் கொடுப்பதற்காகச் சென்றாா். அதற்கு கிராம நிா்வாக அலுவலா் அருகே உள்ள தையல் கடைக்காரா் மோகன்தாஸிடம், பணத்தை கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறினாா்.

இதையடுத்து, அவா் மோகன்தாஸிடம் பணத்தை வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பூமிநாதன், சாலமன் துரை ஆகியோா் மோகன்தாஸை கைது செய்தனா். இதைத்தொடா்ந்து, அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கிராம நிா்வாக அலுவலரான செல்வராஜை போலீஸாா் கைது செய்தனா்.