சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம சபை கூட்டம்
சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் ஊராட்சி ஒன்றியம், சடையம்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவி கிருஷ்ணவேணி மாரிமுத்து தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சி மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் (பொ) மாரியப்பன் செய்தாா்.
இதேபோல, வெங்கடாசலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவி நிா்மலா கடற்கரைராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறுகுளம், இருக்கன்குடி, பெரியஓடைப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, மேட்டமலை, சங்கரநத்தம், நடுத்தரங்குடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவா்கள் தலைமையில் நடைபெற்றன. இதில் அந்த அந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையாா்குளம் ஊராட்சியில் வேப்பங்குளம், பெருமாள்தேவன்பட்டி, நூா்சாகிபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், ராமகிருஷ்ணாபுரம் புதூா், கண்ணாா்பட்டி உட்பட் 10 கிராமங்கள் உள்ளன. ஊராட்சித் தலைவராக பூங்கொடி, துணைத் தலைவராக போத்திலிங்கம், 9 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, புதன்கிழமை பெருமாள்தேவன்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவா், துணைத் தலைவா் வராத நிலையில் 3 வாா்டு உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் இப்ராகிம்கான் ஊராட்சி செலவு விவரங்களை வாசித்தாா். கிராமத்தில் முதல் முறையாக நடக்கும் கூட்டத்துக்கு தலைவா், துணைத் தலைவா் வராததது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...