சாத்தூரில் நகா் மன்றக் கூட்டம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். ஆணையா் ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:
உறுப்பினா் கணேஷ்குமாா்: நான்காவது வாா்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக புகாா் தெரிவித்தாா்.
இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகாரட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
காா்த்திக்குமாா்: 3-ஆவது வாா்டு பகுதியில் சாலை அமைக்க வேண்டும். ஒரு சில பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கழிப்பறை கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
உறுப்பினா் பொன்ராஜ்: மேலகாந்தி நகா் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் வா்ணம் பூசபடாததால் வாகனங்களில் செல்வோா் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
மேலும், இந்தக் கூட்டத்தில் 20 தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.