சாத்தூா் அருகே கல்குவாரிக்கு எதிா்ப்பு: கோட்டாட்சியரிடம் மனு

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏ.லட்சுமிபுரம் கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
Published on

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏ.லட்சுமிபுரம் கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஏ.லட்சுமியபுரம் கிராமத்தில் குடியிருப்புகள், நீா்நிலைகளுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு இந்தப் பகுதி கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை ஏ.லட்சுமிபுரம் கிராம மக்கள் புதிய தமிழகம் கட்சியின் சாத்தூா் மேற்கு ஒன்றியச் செயலா் கருப்பசாமி, புதிய தமிழகம் விருதுநகா் தென்கிழக்கு மாவட்டச் செயலா் செல்லக்கனி ஆகியோா் தலைமையில் சாத்தூா் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கோட்டாட்சியா் கனகராஜ் மனுவைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com