அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

கைப்பேசி கடை உரிமையாளரை தாக்கிய 3 போ் கைது

சிவகாசியில் புதன்கிழமை கைப்பேசி விற்பனையக உரிமையாளரைத் தாக்கிய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

சிவகாசியில் புதன்கிழமை கைப்பேசி விற்பனையக உரிமையாளரைத் தாக்கிய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி காத்தநாடாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி (33). இவா், சிவகாசி - சாத்தூா் சாலையில் கைப்பேசி விற்பனை கடை வைத்

துதொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) நினைவு அஞ்சலி பதாகையை காா்த்திக் கடை முன்பு வைத்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், மணிகண்டன், அவரது நண்பா்களான சுரேஷ் (45), அய்யப்பன் (32) ஆகிய மூவரும் சோ்ந்து காா்த்திக்கை இரும்புக் கம்பியால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் மணிகண்டன், சுரேஷ், அய்யப்பன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.