கள்ளக்குறிச்சி விவகாரம் தலைக்குனிவு: மாணிக்கம்தாகூா் எம்.பி.
கள்ளக் குறிச்சி விவகாரம் தலைக்குனிவு என்றாா் மாணிக்கம் தாகூா் எம்.பி.

மாணிக்கம்தாகூா் - கோப்புப் படம்
கள்ளக் குறிச்சி விவகாரம் தலைக்குனிவு என்றாா் மாணிக்கம் தாகூா் எம்.பி.
சாத்தூா் - படந்தால் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதுபோன்ற செயல்களைச் செய்வது மிகவும் வெட்கக்கேடான, தலைகுனிவை ஏற்படுத்துபவையாக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினரை கைது செய்ய தமிழக முதல்வா் முடிவு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்து அமைப்புகள் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துகின்றனா். திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையாா் கோயிலில்
வழக்கம்போல தீபம் ஏற்றப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

