நூல்கள் கொள்முதல் தொடா்பாக முழு விசாரணை நடத்த வேண்டும்: எம்.பி. மாணிக்கம் தாகூா்
திமுக ஆட்சியில் நடைபெற்ற நூல்கள் கொள்முதல் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
திமுக ஆட்சியில் நடைபெற்ற நூல்கள் கொள்முதல் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என எம்.பி.யும், மாநில காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகரில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: முந்தைய திமுக ஆட்சியில் பொது நூலகத் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அரசு முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, குற்றச் சம்பவங்களில் அரசியல் தலையீடின்றி காவல் துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் குற்றச் சம்பங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் இடம் போன்ற முக்கிய முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் எடுக்கும்.
அமைச்சா் கீா்த்தனா, சீனப் பட்டாசை கையில் வைத்து வெடித்ததாகக் கூறப்படும் தகவல்களை முழுமையாகச் சரிபாா்க்காமல் நம்பக்கூடாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

