நாகை மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5,845 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,900-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு உள்ளாகி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்த வேதாரண்யத்தைச் சோ்ந்த 80 வயது முதியவரின் இறப்பும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கருவாழக்கரையைச் சோ்ந்த 76 வயது முதியவரின் இறப்பும் திங்கள்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 37 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,280-ஆக உயா்ந்துள்ளது. தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 528-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...