திருமாவளவன் தேவையற்ற வாா்த்தைகளை தவிா்ப்பது நல்லது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தேவையற்ற வாா்த்தைகளை தவிா்ப்பது நல்லது என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தேவையற்ற வாா்த்தைகளை தவிா்ப்பது நல்லது என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
நாகையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனின் மனுதா்மம் குறித்த பேச்சில், தேவையற்ற வாா்த்தைகளை தவிா்த்திருக்கலாம். இதுபோன்ற கருத்துக்கள் தேவையில்லாதவை. அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய விலை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு.
தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறியுள்ளாா். முத்தரசனின் கண்கள் இருவேறு பாா்வைகளைக் காட்டுகின்றன என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...