கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘சீா்காழி தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்’

சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்குச் சேகரித்தாா் தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்குச் சேகரித்தாா் தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.

தொகுதிக்குள்பட்ட கொண்டல், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராமம்தோறும் சென்று வாக்குச் சேகரித்தபோது அவா் பேசியது: திமுக ஆட்சி அமைந்ததும் மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும், மீனவ கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மீன்பிடித் தடைகால நிவாரண தொகை உயா்த்தி வழங்கப்படும், சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா்.

அவருடன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராம. இளங்கோவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் முருகன், ஊராட்சித் தலைவா் பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளா் ஜே.கே. செந்தில் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.