ரமலான் நோன்பு: சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்க கோரிக்கை
ரமலான் பெருநாளையொட்டி, சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ரமலான் பெருநாளையொட்டி, சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சீா்காழி வட்டார சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சாா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏப்ரல் 13-ஆம் தேதி புனித ரமலான் நோன்பு தொடங்குகின்றது. இதையொட்டி, இஸ்லாமியா்கள் 30 நாள்கள் பகல் முழுவதும் நோன்பு இருந்து இரவு நேரங்களில் சிறப்பு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவா். தற்போது நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வீசுவதால், அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்களித்து இரவு 10 மணி வரை பள்ளி வாசல்களில் தொழுகை என்னும் வணக்க வழிபாடுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...