கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு

குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

குறுவை நெல்விதைகளை வாங்கி பயனடைய கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளாா்.

கொள்ளிடம் வேளாண்மை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு குறுவை நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவா் பேசியது: கொள்ளிடம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவத்தில் நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். எனவே கொள்ளிடம், எருக்கூா், முதலைமேடு, கடவாசல் ஆகிய பகுதிகளில் நடப்பு குறுவை பருவத்துக்கு ஏற்ற, நல்ல முளைப்புதிறன் உள்ள குறுகிய கால ரகங்களான ஆடுதுறை-45, அம்பை-16, கோ-51 போன்ற விதை நெல்ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தரமான நெல்விதைகள் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆடுதுறை-43 ரகமும் வழங்க உள்ளது. எனவே விவசாயிகள் இந்த தரமான குறுவை நெல் விதைகளை வாங்கி அதிக லாபம் அடையலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.