கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருத்துவா்கள், செவிலியா்களுக்குப் பாராட்டு

மயிலாடுதுறை கூரைநாடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு மாயூரம் ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை கூரைநாடு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு மாயூரம் ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் கரோனா காலத்தில் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். சேகரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் எஸ். பாஸ்கரன், ரோட்டரி பள்ளித் தாளாளாா் எஸ். பொ்னாா்டு ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை வழங்கினா். எஸ். உமாபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். முடிவில், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், மருத்துவா் ரவிக்குமாா், மேற்பாா்வையாளா் செந்தில் ஆகியோா் ஏற்புரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.