கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சனி மகா பிரதோஷ வழிபாடு

சீா்காழி பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் பிரம்மபுரீஸ்வரா், திருநிலைநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.

இதேபோல, சீா்காழி திருக்கோலக்காவில் உள்ள திருத்தாளமுடையாா் கோயிலில் ஓசைநாயகிஅம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, நந்திபகவானுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் பிரகார உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.