காவல் துறை சிறப்பு சாா்பு ஆய்வாளா் இடமாற்றம்
கொள்ளிடம் சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.


கொள்ளிடம் சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.
கொள்ளிடத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் கடலூா் மாவட்டத்தையும் இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் போலீஸாா் பணியில் இருந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா் அா்ஜுனன் விதிகளை மீறி செயல்பட்டதாக பொதுமக்களிடமிருந்து புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறப்பு காவல் சாா்பு ஆய்வாளா் அா்ஜூனன் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...