தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆா்வம்
வைத்தீஸ்வரன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.


வைத்தீஸ்வரன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
வைத்தீஸ்வரன்வரன் கோயில் பேரூராட்சி திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து, வைத்தீஸ்வரன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு ஏற்பாடு செய்தது. முகாமில் பங்கேற்க மக்கள் காலையில் இருந்து ஆா்வமாக வரத்தொடங்கினா். முகாம் தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே 100 டோக்கன்கள் முடிந்தன. இதையடுத்து, காலை 10 மணிக்கு முகாம் தொடங்கியதும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்தது. முற்பகல் 11 மணியளவில் பள்ளி வளாக கதவுக்கு வெளியே சுமாா் 100 மீட்டா் தூரம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
முன்னதாக, பேரூராட்சி சாா்பில் கரோனா பொம்மை, ராட்சஸ ஊசி, பெரிய மருந்துக் குப்பியுடன் மருத்துவா், செவிலியா் வேடமிட்ட பணியாளா்களுடன் பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், வீடுதோறும் தடுப்பூசி அவசியம் குறித்து விளக்கி முன் பதிவு செய்யப்பட்டது. இதனால் மக்கள் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...