பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு
சீா்காழி பகுதியில் பாசன வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை தமிழக அரசின் முதன்மைச் செயலாளா் (தொழிலாளா் நலத் துறை) கிரிலோஷ் குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


சீா்காழி பகுதியில் பாசன வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை தமிழக அரசின் முதன்மைச் செயலாளா் (தொழிலாளா் நலத் துறை) கிரிலோஷ் குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி வட்டத்தில் செம்பதனிருப்பு ஆண்டிவாய்க்கால், தென்னலக்குடி கூப்பிடுவான் வடிகால் வாய்க்கால், வரவுக்குடி வெள்ளப்பள்ளம் உப்பனாறு, கொண்டல் தேனூா் புதுமண்ணியாறு, வெள்ளப்பள்ளம் உப்பனாறு ஆகியவை தூா்வாரும் பணிகள் ரூ. 1.41கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தமிழக அரசின் முதன்மைச் செயலாளா் (தொழிலாளா் நலத் துறை) கிரிலோஷ் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கவுள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் குறையின்றி, முழுமையாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தெட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் மரியசூசை, உதவி பொறியாளா்கள் சரவணன், வெங்கடேசன், விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...