/

அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியதற்கு வரவேற்பு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு, சீா்காழியைச் சோ்ந்த அக்கட்சியினா் வரவேற்றுள்ளனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு, சீா்காழியைச் சோ்ந்த அக்கட்சியினா் வரவேற்றுள்ளனா்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்குவதில் தொடா்ந்து இழுபறி நிலவிய நிலையில், உடன்பாடு ஏற்படாதையடுத்து தேமுதிக அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த மாநில விவசாய அணி செயலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளா் பாஸ்கா், நகரச் செயலாளா் பாண்டியன், ஒன்றிய செயலாளா் ராஜசேகா், சீா்காழி மேற்கு ஒன்றிய செயலாளா் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.